Sunday, November 25, 2012

பேரு வக்கிறாங்க பேரு !

வாங்க, வணக்கம், chair வச்சிருந்தா உக்காருங்க pls. மேல இருக்க அறிமுகத்த பாத்து ஏதோ முருக தாஸ் பட கெத்து மாதிரி இருக்குன்னு இந்த posta படிச்சிட்டு இருந்தீங்கன்னா, மன்னிச்சுகோங்க! இது ஒரு பொழப்பில்லாம எழுதர blog. எதாவதும் எழுதனும்னு எழுதுரோம். எழுத்து பிழைகளுக்கு வருந்துகிறோம்!

நம்மளோட முதல் தலைப்பு பெயர்கள். இது வெறும் தமாசுக்குதான். யார் மனசையும் புண்படுத்தும் நோக்கத்தோடு இல்ல. 

பேரு வெக்கிறது அப்டீங்கறது ஒரு பெரிய பொறுப்பு. வருங்கால அம்மா, அப்பாக்களுக்கு இது ஒரு கண்திரப்பான் (Eye Opener தான் தம்ழ்ல சொல்றோம் !)

அதாவது அடிப்படையாவே பேர் வக்கிறதுல நீங்க எல்லாம் அடி முட்டாளுங்க. குறிப்பா நம்ம ஊரு style a  பேர் வக்கிறீங்க பாருங்க நல்லா சந்தானம் காமடி பண்ற மாதிரி.

முதல்ல இப்போ எடுத்துக்காட்ட தேவயாணி அப்டீங்கற பெற எடுத்துகோங்க. அதுக்கு என்னதான் அற்புதமான அற்தம் இருந்தாலும், அந்த பேர் செம காமெடி. பத்து, பதினோரு வயசுல கோடா படிக்ற பசங்க எல்லாம் தேவையா  நீ ? அப்டீன்னு மாத்தி கிண்டலடிக்க ஆரம்பிச்சுடுவானுங்க. அது மட்டும் இல்ல, பொறந்த கொழந்தகிட்ட பொய் தேவையா நீ ? நு கேட்டா பாவம் அது என்ன பண்ணும்.

அப்டி தான் வந்தனா ன்ற பேரு. அது என்னா பேரு ? வந்தனா வரலையா நு ? அதே மாதிரி பசங்க பேரு பாருங்க. சுகுமார்! என்ன நெனப்புல அந்த பேரு வக்கிறீங்க ? அப்புறம் பிரேம். என்னா கண்ணாடி பிரேமா இல்ல போட்டோ பிரேமா?

ஒரு மனுசனோட பேரு அவன ரொம்பவும் பாதிக்குது. அவனோட நடத்த வடத்த, மன வளர்ச்சி, எடிர்காலதுல அவன் அவன பத்தி ஆழ் மனதுல என்ன 
மாதிரியான கண்ணோட்டம் வைப்பான், எல்லாமே அவனோட பேரோட அடிப்படையில அமையுது. அதனாலதான் பேருக்கு இவ்ளோ முக்கியத்துவம் .

பிற மொழி பேர் வக்கிறதுல தப்பு இல்ல ஆனா அர்த்தத்துக்கு எவ்ளோ முக்கியத்துவம் கொடுக்ரமோ அதே அளவுக்கு அழகுக்கும் முக்கியத்துவம் கொடோக்கணும். இப்போ ஷில்பி அப்டீங்கற பேரு இருக்கு இல்ல, அத ஒரு ரெண்டு முற சொல்லி பாருங்க. அதே மாதிரிதான் சுஷ்மா, நாத், அரீஷ் எல்லாம் மொக்கையாயிடும். பேரு யோசிக்கும் பொது அந்த பேரு பதினஞ்சு வயசுக்கு அப்புறம் ஸ்டைலா இருக்குமான்னு யோசிங்க. அப்ப பேரு ரொம்ப முக்கியம். பேரு உங்களுக்காக இல்ல பசங்களுக்காக. அப்டி முடியலன்ன கருமத்த வச்சே தொலயாதீங்க. 

உண்மைய சொல்லனும்னா பசங்களுக்கு choice இருக்கணும். அத விட்டுட்டு உங்க பாட்டி பேரையும், உங்க ஊட்டு காரு தாத்தா பேரையும் சேர்த்து ராம்நாயகீ, தேவரங்கீ, இப்டி எல்லாம் பேரு தயரிக்காடிங்க என்ன. தமிழ்ல பேரு வைங்க முடிஞ்சா. அந்த காலத்து பெற கொஞ்சம் மாத்தி வைங்க.
விஸ்வமித்திரன்'ல இருந்து விஷ்வா , மித்ரா நு பேரெல்லாம் வருது இல்ல. அதுக்குன்னு அவ்வை, வல்லுவல், அப்டி எல்லாம் வச்சு தொலையாதீங்க.
முடியலேன்னா தயவு செஞ்சு online ல தேடுங்க. பேரு வைக்க ஜோசியம் சாஸ்திரம் எல்லாம் பாத்து ஏதும் நடக்க போறதில்ல, என் கணிதம், கண்டது, கடாதது எல்லாம் பாத்து பெற யோசிக்காதீங்க. உங்க பசங்க நிம்மதிக்காக சொல்றோம். கேட்டா கேளுங்க, இல்லேன்னா மூடிட்டு போயிட்டே இருங்க என்ன.